பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கொல்லன் இரும்பைப் பழுக்கக் காய்ச்சித் தனது உலைக் களத்தில் அடிக்கிருன்.

இரும்புத் துகள்கள் ஒளிர்ந்து சிதறிப் பறந்து அவ்வமயம் விழுகின்றன.

இவ்விரும்புத் துகள்கள் உதிர்வது வேங்கைப் பூ உதிர் வதைப் போல இருக்கிறதாம்.

வண்ணவுவமையும் தொழிலுவமையும் எப்படி கூறப் பட்டிருக்கிறது பார்த்தாயா ?

  • கொல்லன், எரி பொன் பிதிரின் சிறுபல தாஅய், வேங்கை வீயுகும் ஓங்கு மலைக்காட்சி' என்று வரும் நற்றினைப் பாடல் கூறுகிறது.

காந்தட் பூவைக் காட்டிலும் என்னிடத்தில் இருபது மகரந்தப் பைகள் (Athers) உண்டு,

எனவே என்னிடத்தில் (Pollen) தாது அதிகம் இருக்கும். இப் பூந்தாது பொன் போன்ற நிறமுடையது.

இந்தத் தாதைக் கண்டதும் வண்டினம் கூட்டம் கூட்டமாக என்னச் சூழும். வட்டமிடும். ஏன்? உண்ணt மகிழ !

சில நேரங்களில் வண்டுகள் என் மீது தங்களுடைய வாயை வைத்ததும் நான் அகமலர மலர்வது முண்டு.

வேங்கைப் பூ அதிகம் மலர்ந்த மரத்தில் மஞ்ஞைகள் வந்து கூடி மகிழும். ஏன் தெரியுமா ?

மயில்கள் வேங்கை மரத்தில் வந்தமர்ந்து தங்களது தோகைகளை விரித்து ஆடிக் கொண்டிருக்குமாம்.

அவ்வமயம் எனது பூந் தாதுக்கள் அம்மஞ்ஞைகளின் தோகைகளில் சொட்டும்.

அதனுல் மயில்களது அழகுத் தோகைகள் அழகுக்கு அழகு பெறும் காட்சியாக இருக்குமாம்.

"பொன்னின் அன்ன பூஞ்சினை தழிஇ தமழ்தாது ஆடிய கவின் பெறு தோகை என்று நற்றினே 595-வது பாடல் கூறுகிறது,