உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台垒

பெயல் துளியோடு இறங்கிய்ை! பேரின்பப் பூரிப்பால் அயலே நிற்காமல் அருகில் நின்றேன்.

உருகி நின்ற என் வேருக்கு உயிர்ப் பிச்சையளித்தாய்! கேணி நிரம்பிற்று! நானும் தழைத்தேன்! அம்மா இல்லாதார் இருக்கின்ற இடமெலாம் துல்லிய இதயத்தோடு தூவானமாகி, கல்வியெறிந்தாய் இன்னலை!

வாழ வகையற்ருேர் வாழ்கின்ற இடமெலாம் ஒய்வின்றி நீயே ஒடுகின்ருய் என்பதை இதிலிருந்து அறிந்தேன் நான்!

இற கு

அன்பின் உருவே! அழகின் ஆரம்பம் எனக்குத் தெரியாது.

உன்னைப் பார்த்தபோது முடிவு இப்படித்தான் இருக்கு மென்று புரிகிறது.

உன்னுலானவைகள் ஆயிரங்கள் இருக்கலாம்! அதிலே நானும் ஒன்று:

என்னையேன் பறவைகளின் சிறகுகளிலே இறகாக்கிய்ைதி மயிலின் இறகாக இருந்திருந்தால் புள்ளி நிறங்கொண்டு தென்றலுக்குக் கவரி வீசி மகிழ்ந்திருப்பேன்!

கொக்கின் இறகாக என்ன ஆக்கி விட்டாயே! தாயே! அந்த கொக்கு ஒருநாள் வானத்தில் பறந்தது. அது எவ்வாறெலாம் போனதோ அவ்வாறெலாம். அதனைத் துரக்கிக் கொண்டு செல்ல வேண்டும்

கொக்கு என்னைத் தன் விருபத்திற்கேற்ப ஆட்டி வைக்க எண்ணுகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/65&oldid=564509" இலிருந்து மீள்விக்கப்பட்டது