பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன!

தினந்தோறும் ஒரு தவளை நானிருக்கும் பக்கத்தில் வந்து அணலுக்கு ஒண்டும்,

அதை நீயும் தானே பார்த்தாய்! பாறையிலே தேங்கியிருக்கும் நீரில் ஒரு நாள் அது முட்டைகளே இட்டது:

தவளையை அதற்குப் பிறகு காணவில்லை! வெயில் காய்ந்தது! பாறை நீர் வற்றியது! எப்படியோ முட்டைகள் பாறையின் இடுக்கில் சென்றன! வசந்தமும்-கோடையும் மாறி மாறி வந்தன!

ஒருநாள் பாறை திடீரென்று வெடித்தது! செத்துவிட்டேனுே என்று அஞ்சினேன். காரணம்; என்மேல் சரிந்து அது வேறுபக்கம் விழுந்தது. தாயே! இது என்ன சோதனை: இறுகிய பாறை எப்படி இளகி வெடித்தது? இப்போதுதான் புரிகிறதம்மா எனக்கு! தவளையைப்ப்போல் நீரிலும் இல்லாமல் நிலத்திலும் இல்லாமல் நிலையற்றவர்கள் கட்டுக் குலையாத ஒரு அமைப் பில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன்!

மனஉறுதி படைத்தவராக மக்கள் இருக்க வேண்டும்! என்ற கருத்தையும் பெற்றேன்!

நிலையற்ற உள்ளம் படைத்தோர் தன்னல முட்டைகளை இடுவரேயானல், அன்பால் இறுகிய பாறை தேரையின் உயிர்ப்பால பிளக்கும்!

அப்பெரிய அமைப்பின் கீழ் பூண்டாக இருக்கும் பாமரர் நசுங்கி நலிய ஏற்படும் என்பதை என் மூலம் உண்ர்த்து கிருயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/68&oldid=564512" இலிருந்து மீள்விக்கப்பட்டது