பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7互

இப்போது என் எண்ணம் மேகத்தைத் தாண்டிபூமியின் ஈர்ப்புப் பிரதேசத்தைத் தாண்டி-இறகுகூட நகர முடியாத காற்றில்லா பகுதியைத் தாண்டி.கோள் மண்ட லத்தைத் தாண்டிச் சென்ற வண்ணமாகவே இருக்கின்றது.

அந்த இருள்படர்ந்த வான் வெளியில் நெஞ்சத்திவிருந்து கீழ்நோக்கி ஏதோ ஒன்று வருவதுபோல் நான் உணர்கிறேன்.

அந்த உருவத்தின் முழுமையும் எனக்குத் தென்படா விட்டாலும்- ஒரு வெண்மையானப் புள்ளி நிலப்பரப்பை நோக்கி வருவதை என்னுல் உணர முடிகிறது.

நான் இருக்கின்ற பிரதேசத்தில் மின்னல் இல்லை-விண் மீன்களது ஒளியில்லை-எங்கும் இருள் மயம்!

இப்போது நிலம் நோக்கி வருகின்ற உருவத்திற்கு நீண்டு. விரிந்த சிறகுகள் இருந்தன.

அதனுடைய இறக்கைகள் பகுத்தறிந்த அறிஞன் ஒருவன் வாழ்க்கையில், வாழயியலாத மக்களுக்கு அறிவுரைக் கூறிவிட்டு வாழ்த்தும்போது இருக்கின்ற கை அசைவைப் போல்-அதனுடைய இறக்கைகள் மென்மையாக ஆடிக் கொண்டிருந்தன.

அந்தப் பறவை வான சாம்ராச்சியத்தின் துதுவளுகவே இருந்தது!

இரக்கப்பட்டு அருள் வழங்கும் ஒருவனின் தூய்மையான உள்ளமும்-அதன் உடல் நிறமும் ஒன்ருக இருந்தது.

வயிரத்தின் ஒளியும்-பொன்னின் கதிர்த் தெறிப்பும் அதன் கண்ணிலே ஒளிர்ந்து கொண்டிருந்தன!

இப்போது அந்தப் பறவையை என்னுல் சரியாகக் காணமுடியும்.

செதிள் செதிளாக அணிவகுத்து எழில் பரப்பிக் கொண் டிருக்கும் இறகுகள்-அதன் சிறகுகள் மீது படர்ந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/72&oldid=564516" இலிருந்து மீள்விக்கப்பட்டது