பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

3

உடனே எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏனென்ருல், அந்தப் பறவையைச் சுற்றியிருக்கும் பிழம்பொலி என் கண் மனியைக் கூசவைத்தன.

தங்கமே எரிந்து பூவான யூவானமாகிக் கொட்டுகின்ற பூவெல்லாம் நவரத்தின வண்ணத்தோடு சிதறுமானல்தாங்க முடியாத அவ்வொளி வெள்ளத்தை எந்தக் கண்ணு லும் ஆட்கொள்ள முடியாதல்லவா?

இப்போது நான் இந்த நிகழ்ச்சியின் விளைவால் கீழ் : து தி நித நிகழி #9

நோக்கித் தள்ளப்பட்டு விட்டேன்.

எனக்கு முன்னுல் நெடிய மலை-என்னைச் சுற்றிலும் ஒரே பள்ளத்தாக்குகள்

காற்றின் பேசிறைச்சலால் உளறிக் கொண்டிருக்கும் குகையின் எதிரொலிகள்!

பேசிறைச்சலோடு கீழே விழும் நீர் வீழ்ச்சி! கீச்சான் பூச்சிகளின் தொடரொலிகள்!

காட்டு விளங்குகளின் உறுமல்!

ஆஞலும் என் கண்கள் மட்டும் அறிஞன் ஒருவனின் கபாலத்தைப்போல் வளைந்திருக்கும் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தன!

வான் மண்டலத்தில் நான் பார்த்த பறவை என் கண்களுக்கு இன்னும் தெரியவில்லை.

நான் இருக்கும் பகுதி மலைப்பகுதியாக இருப்பினும் பக்கத்திலே மக்கள் வாழும் பகுதியும் இருக்க வேண்டும்.

இரவு உணவை முடித்துவிட்ட கிராம மக்கள் பறை யொலியால் ஒரு கூத்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப் பதை என்னல் காண முடிந்தது.

அவர்களும் விழித்திருக்கிரு.ர்கள்-நானும் விழித்திருக் கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/73&oldid=564517" இலிருந்து மீள்விக்கப்பட்டது