75
இவ்வளவு பேராசை எனக்கு இருப்பதற்குக் காரணம்தான் சிறு வயதிலேயே-தாயின் ஒரு மார்பகத்தில் பால் குடித்துக் கொண்டிருக்கின்றபோதே-மற்ருெரு மார்பகத்தை யாரும் சுவைத்துவிடக்கூடாதே என்று எண்ணியப் பழக்கந்தான்.
இதை மனிதப் பேராசை என்று எண்ணிவிடாதே; குழந்தை ஒரு தெய்வம்! இது தெய்வீக ஆசை!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு என் நெஞ்சே! உன்ே நான் உறவாடுகிறேன்.
இ
மனசாட்சியையும் உன்னையும் சூழ்நிலைச் சந்தையில் சொற்ப விலைக்கு விற்று-நெடிய நாட்களாக மேற்கூறிய இரண்டுமற்றவகை இருந்து கொண்டிருந்தவன்.
அறிவாளர் பனுவலாலும்-அறிந்தோர் மொழி பாலும்செறிந்தோர் அமைதியில் செழித்த அடக்கத்தாலும்.இழந்த இரண்டையும் நான் திரும்பப் பெற்றேன்.
கடலுக்கு அடியில் இருக்கின்ற மணல் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதாக எந்த கந்தகப் பூமியும் ஒத்துக் இகாள்வதில்லை.
அதைப்போல எனது இதயத்தின் அடித்தளத்தின் சூட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசைகள் குளிர்ச் சியோடில்லை.
எண்ணமே! அதோ அந்தப் பறவை வருவதாகத் தெரிகிறது!
எனது கனவுகள் உருவம் பெற அந்தப் பறவை. விடமிருந்து ஒரு செய்தி கொண்டு வா!
நிலவுக்கு அருகில் இப்போது அப்பறவை என் கண் களுக்குத் தெரிகிறது.
அதன் வருகையால் அந்த நிலவு மேலும் குளிர்ந்து விட்டது: