பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ

அறிஞர்கள் இயற்கையின் பகுதி என்று அறிந்த பிறகு: வெறும் பிரச்சினைகளால் உருவான அரசியல் கட்சிகளின் சட்டங்கள் அதனை ஒன்றும் செய்துவிட முடியாது.

கொந்தளிக்கும் கடலிலிருந்து மின்சாரத்தை எடுத்துக் கொள்ள முயற்சித்துக் கொள்ள வேண்டுமே தவிர கரிக்கிறதே கடலென்று கருதி கடல்மீது போர் தொடுக்கக் கூடாது:

அண்ணுவின் அறிவுரைகளிலிருந்து நாட்டுக்குரிய நல்ல வற்றை எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக புறக்கணிக்கக் கூடாது; புத்திசாலித்

தனமுமல்ல!

கடலேக் கூர்ந்து கவனித்தால், அதனுடைய ஆழம் அளப்பறிய தூரத்திலிருந்தாலும்-நீர்மட்டும் மக்கள் வாழும் நிலப்பகுதியோடு ஒன்றியிருப்பது தெரியும்.

ஆழ்ந்த அறிவுடையோர் எப்போதும் மக்களுடனே சரி. சமமாகவே இருப்பார்கள். அந்தஸ்து-பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இரு ப் ப ைத் தவருகக் கணக்கிட்டுக் கொண்டு, ஆழத்தை மேடென்று நினைத்து ஏறினுல் அவர்களுடைய பயணம் பாதாளத்தை நோக்கித் தான் நடக்கும்!

அதோ அந்தக் கடல், அடிவானத்தின் உதட்டை அளுதிக் காலந்தொட்டு சுவைத்துக் கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் பரந்து விரிந்த நீர்த் தகடு அமைதியோடு தொடு வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கிறது.

இந்த மயக்கக் காட்சியிலிருந்து பாடம் பெற வேண்டிய வர்கள், அதை மாயை என்று கூறி பதம் குலேந்து விடு கிரு.ர்கள்.

எவ்வளவுதான் உயரமான நிலையிலே ஒருவன் இருந் தாலும்-அவன் கடலைப் போன்ற ஆழ்ந்த அறிவாளர்களி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/85&oldid=564529" இலிருந்து மீள்விக்கப்பட்டது