பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

டத்தில் அடிவணங்கித்தான் ஆக வேண்டும் என்பது அடி வானத்தின் தத்துவமாகும்.

கரையிலிருப்பவர்கள் தங்களுடைய செங்கோலே வைத்துக்கொண்டு, அடிவானுக்கும்-ஆழிக்கும். ஏற்பட்டத் தொடர்பை அலட்சியமாக நினைக்கும்பொழுது-அடுக்கடுக் காக வருகின்ற அலைப் புரட்சியை சாதாரணமாக நினைக்கும் பொழுது-எத்தனையோ செங்கோல்கள் அந்த அகண்ட அறிவுக் கடலின் ஆழத்தில் விழுந்து முழுகிவிட்டிருப்பதை பும் காண முடிகிறது.

எதேச்சாதிகாரிகள் தங்கள் ஆணவக் கோலைத் தேடிக் கொண்டே இருக்கிரு.ர்கள்-கிடைக்கவில்லை அவை.

φρ વૃદ્ધ 密

தான் கற்பனை செய்யவில்லே. இப்போது கடலின் அடி பாகத்தில் இருக்கிறேன். அங்கே அலைகள் இல்லை. நீரின் அமைதி-அழுத்தமானப் பாறைகளைப் போல மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றது.

நான் கடலின் உள்ளிருந்து வாளுேக்கி அண்ணுந்துப் பார்த்தேன். ஒரே ஒளிமயம் நீர் மட்டத்தில் இருந்தது. இப்போது நான் வியப்படைகிறேன்.

ஒரு முழுநிலவு, எனது காலடியில் இருந்தது! நான் வெளி உலகத்தில் பார்த்த நிலவை விட-இந்த நிலவு ஒழுங் காக வரையப்பட்டிருந்தது.

ஒரு தடவை அறிஞர் அண்ணு அவர்களிடம் இந்தக் காட்சியைக் காண முடிந்தது.

தூய அன்போடு இருக்கும் அவரை, என்னை உங்களது

அறிவாழத்திற்கு அழைத்துப் போங்கள்’ என்று வேண்டி தின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/86&oldid=564530" இலிருந்து மீள்விக்கப்பட்டது