பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

சிப்பி கடல் பஞ்சின் குகையில் வந்து அடங்கியது. நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன்.

என்ன செய்து கொண்டிருக்கிருய் சிப்பியே! என்று கேட்டேன். புதிய நீர்த்துளி விசும்பைவிட்டு நழுவிற்று” அதனைப் பிடித்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன். என்றது.

'இதற்கு மேலே என்ன செய்யப் போகிருய்?’ என்றேன். நான் குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்து, இதனை நல் முத்தாக்கி வெளியே விடப் போகிறேன்’ என்றது.

அறிஞர் அண்ணு அவர்களும், வானத்திலிருந்து நீர் விழு. வதைப் போல-புதிய பிரச்னைகள் கீழ் நோக்கி விழுகிற நேரத்திலெல்லாம் சிப்பியாக நின்று அதைக் கவர்ந்து விடுகிரு.ர்.

மலரில் விழுந்த பனித்துளியின் உருவோடு தேளுகிறது. முத்துச் சிப்பியில் விழுந்த நீர்த்துளி, நீரைப்போல இளகி இல்லாமல் இறுகியிருக்கிறது. அதனைத்தான் நாம் முத்து என்கிருேம்.

இதழில் விழுந்தால் தேன்-சிப்பியில் விழுந்தால் முத்து.

சில அரசியல் தலைவர்கள் பிரச்சினைகளைத் தேனைப் போல ஆக்கி, எறும்பைப் போலுள்ள சாதாரண மனிதர்களிடம் கூடத் தெரிவித்து விடுகிருர்கள்.

அறிஞர் அண்ணு போன்றவர்கள்தான் சிப்பியை போல அந்தப் பிரச்னையை அமைதியான இடத்தில் வைத்துசிந்தித்து-அதே பிரச்னையைப் போல திட்டத்தையும் தீட்டு கிரு.ர்கள்.

வான் நீர்த் துளியாக இருந்தால் சிப்பியில் ஒரு முத்து

தான் இருக்கும். அதாவது தெளிவானப் பிரச்னைகளுக்கே.

முத்தான திட்டங்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/88&oldid=564532" இலிருந்து மீள்விக்கப்பட்டது