தமிழ்த்தாயின் அமிழ்த மகன் அறிஞர் அண்ணு வைப் பற்றி, பக்தியால் பரவசப்பட்டுப் பாடிய அடியார்களைப் போல், ஆழ்வார்களைப் போல், க விஞர் கலே மணி அவர்கள் உரைநடையால் சொல்லாஞ்சலியாக்கித் தந்திருக்கிருர். தமிழ் கடை இக்துரலில் புதிய திருப்பத்தைப் பெற்றிருக்கிறது. இப்புதிய செஞ்சொல் கவிநயம் கலந்த உரைநடை படிப்போர் உள்ளத்தையும், கேட்போர் நெஞ்சை யும் எளிதிலே வசீகரம் செய்து கொள்ளும்.
நூலில் பேரறிஞர் அண்ணுவைப் பற்றியே சொல்லப்பட்டிருந்தாலும், புத்தம் புதிய இலக்கியக் கொத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வே, இந்துதலில் மிகும். ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவரைப் பற்றிய நூல் என்ற உணர்வை அடியோடு மறந்துவிடச் செய்கின்ற, கருத்துச் செறிவான, சொற்களஞ்சியங்களால் ஆக்கப்பட்ட துல் சொல்லாஞ்சலி.
இந்நூல் ஆசிரியரைப் பற்றி டாக்டர்,"கலைஞர் மாண்புமிகு முதலமைச்சர் மு. கருணுகிதி அவர்கள் கூறியது போல் 'அவர் ஆற்றலின் தொகுப்பு இந்நூல் என்ருல் மிகையன்று. தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பேராசிரியர்களோ, எழுத்தாளர் களோ இந்நூலேப் பற்றிக் குறிப்பிட்டு எழுதும் கால கட்டம் அவசியம் வரும்,
மிகச்சிறந்த வெளியீடுகளில் ஒன்றன. இச்சீரிய வெளியீட்டைத் தமிழுலகம் வரவேற்குமாக,
- பதிப்பகத்தனன்