39
எவ்வளவுக்கெவ்வளவு பொருள்களை அதனதன் தகுதி களைப் பார்த்து நாம் நெருங்குகிருேமோ-அவ்வளவுக் கவ்வளவு அப்பொருள்களின் பயன் நமக்கு மட்டுமல்ல மனித சமுதாயத்திற்கே கிட்டுகிறது.
தான் கொஞ்ச தூரம் அப்படியே கடலடியில் நடந்து சென்றேன். அங்கே கடற்செடிகள் இருந்தன. சங்குகள் பல வண்ணத்தில் காட்சியளித்தன.
கடல் செடி ஒன்றைப் பிடுங்கிக் கிள்ளிப் பார்த்தேன். அது மிக சுலபமாக என் கைக்கு வந்துவிட்டது. அதன் பசுமை கடலின் கரிய நிறத்தைவிடக் கரும்பச்சையாக இருந்தது.
அதன் இலைகளின் மேலே பஞ்சு போன்ற மென்மைச் சுனைகள் இருந்தன. இந்த இடத்தில் இது தழைப்பதற்கு அவசியம்தான என்று எனது சராசரி மூளை கேட்க ஆரம் பித்தது.
அப்போது அந்தச் செடி "நான் மீன்களின் இரை பாகவே இங்கு இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டது.
'மீன் குஞ்சுகள் என்னுடைய தழையால் வளர்த்து அதன் பிறகுதான் அவை புலால் உண்ண ஆரம்பிக்கின்றன. இப்போது என்னுடைய தண்டை உடைத்துப் பார், உனக் கொரு வியப்பான உணர்ச்சி தோன்றும் என்றது.
நான் அதன் தண்டை இரண்டாகப் பிளந்தேன். அதனுள்ளே அளவிடமுடியாத வெதவெதப்பு இருந்தது. "இந்தச் சூடு அந்தத் தண்டுக்குள் எப்படி வந்தது? உனக்குத் தெரியுமா?’ என்று பேசிற்று.
வைதீகளுக இருந்தால் எல்லாம் கடவுள் செயல் என் பாய். உன்னைப் பார்த்தால் பகுத்தறிவுவாதி போல இகுக் கிருயே! என்றது.
நான் விழித்தேன். ஒரு கரு வளர்வதற்கும்.அது வளர்ந்து உரு பெறுவதற்கும்-சூடும் குளுமையும் தேவை.