பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆岛

இயற்கையின் நெசவு வேலையால் ஆக்கப்பட்டவர் அவரை துன்பத்திற்கிடையில் கண்டு பிடிப்போருக்குத் தன் னுடைய பவழக் கூட்டையே ஒப்படைத்து விடுகிரு.ர்.

பொதுவாகப் பவழக் கூடுகளைப் பெற விரும்புவோர்கள் உயிரைப் பணயம் வைத்துக் கடற்பயணம் செல்ல வேண்டும். அண்ணுவின் அன்பு என்ற பவழத்தை அடைய விரும்பு வோர்களும் தங்களுடைய உடைமைகளே இழந்து-சமுதாய நெறிச்சலினல் நொந்து போயிருக்கிருர்கள்.

தமிழர் கொடுத்த மொழிப் போராட்டத்தில் அண்ணு. வின் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தவர்கள் பவழக் கூட்டைத் தேடிச் சென்ற கடற்பயண வீரர்களைப் போல தங்களது உயிரையே காணிக்கையாக்கி இருக்கிருர்கள்.

அறிஞர் அண்ணு அவர்கள் உலக மக்கட்கு கடலேப் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பதை எனது கடற் பயணத்தால் கண்டேன். நாள் தோறும் நான் கடற்காற்று வாங்ககடற்கரைக்குப் போகும் போது,கடலைக்காண்கிறேன். அப்போது அறிஞர் அண்ணு எனது இதயத் திரை அரங்கிலே தோன்றுவதையும் காண்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/94&oldid=564538" இலிருந்து மீள்விக்கப்பட்டது