பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சூள் உரைத்தான் நாத்திகன் !

திருவாளர் துளசிங்கம் அவர்கள் முற்றிப் பழுத்த சிவப்பழம். அங்கிங்கெளுதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி இருக்கின்ற பித்தனைப் பற்றிய சிந்தனை லயிப்பிலேயே சதா சர்வ காலமும் பித்தாகிக் கிடந்தார். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை யினை எட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணிர் சொரிந்து இறும்பூது எய்தத் துடித்தவராக, நீட்டிய கரங்களை மடக்காமலே, படுக்கையில் தலைமாடு கால்மாடு மாறி, மயங்கிச் சாய்ந்து கிடந்தார். நெற்றித் திட்டில் திரு கிற்றுக் கோடுகள். கலக்கமும் கைப்பும் உருவேற்றிய உவர்க் கோடுகள், சுருக்கம் விழுந்த முகத்தரையில் கிறுக்கிக் கிடந்தன. - -

நீல வண்ண விளக்குகளுள் ஒளி ரேகைகள் கண் பொத்தி விளையாடின. -