பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


சொல்ல வாயெடுத்தாள். அதற்குள், அவன் வாயெடுத்துப் பாடத் தொடங்கி விட்டான் :

தில்லித் துருக்கர் செய்த வழக்கமe பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல், வல்லி யிடையினையும் ஓங்கிமுன்னிற்கும் - இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய் ; வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் - துணி

மறைத்த தளுலழகு மறைந்ததில்லை ; சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலே - முகச்

சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ?”

ஹாஸ்டல் விழாக்களில், மகிழ்ச்சி கரை தாண்டும் போது, பாடத் தெரியாதவர்கள் கூட வாயைத் திறந்து பாட்டுப் பாடி விடுவார்கள். அதே கதைதான் இப்போ தும் கடந்தது. காளத்திக்கு இவ்வளவு சுருதி சுத்த மாகப் பாட வருமா? -

மஹேஸ்வரிக்கே அதிசயமாகப் போய் விட்டது. இரவு தன் அறையில், உறக்கம் கொள்ளாமல், ஆணுல் உணவு கொண்டு புரண்ட சமயத்தில், பாரதியின் புத்தகத்தை மார்பில் பதியவைத்துப் புரட்டிக் கொண் டிருந்தாள். அப்பொழுது, இதே பாட்டை அவளும்தான் தனக்குள்ளாகப் பாடிப் பார்த்தாள் !

g மஹறி to: - -

காளத்தி கூப்பிட்டான். அவள் வந்து சேருவதற் குள் அவனுக்கு அவசரம் தாளவில்லை போலிருக்கிறது. அண்டி வந்தான். பாட்டின் ஒவ்வொரு அடியாகப் பாடினன். அவளது சே2லத் தலைப்பைக் கொய்து முக் காடு போட்டுப்பார்த்தான். பாடாமல் பாடி, தொடாமல் தொட்டுக் காட்ட விழைந்த வரிகளுக்கு வாய்ப்புக் கிட்டி விடுவது அவ்வளவு சாமான்யமா, என்ன ?