பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125


அப்பொழுது மஹேஸ்வரி கட கட வென ககை கக்கினுள். அதே வேளையில் அவளுடைய அலங்காரப் பை நூறு ரூபாய்த் தாள்கள் சிலவற்றைக் கக்கின. மிஸ்டர் தமிழ்ச்சித்தன், உங்கள் மூளையை விட என் மூளை ஆண்மை மிகுந்தது. அனைத்தையும் ஆலோ சித்தேதான் நான் செயற்படுகிறேன். உங்களுக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டு மிஞ்சு வதை என்னிடம் தாருங்கள் !”

மீளவும் தமிழ்ச்சித்தனின் மூளே மீள முடியாத அளவுக்குக் கதிகலங்கியது. அவனுக்குச் சொந்தமான கண்கள் நீர் பொழிந்தன. -

மிகுதிப்பட்ட பணத் தாள்களோடு மஹேஸ்வரியும் காளத்திநாதனும் புறப்பட்டார்கள். தமிழ்ச்சித்தன் வேதனை பொறுக்க முடியாமல் அப்படியே சோடாவில் விழுந்தான். அவன் கையிலிருந்த இங்கர்சாலின் சிந்தனை நூல் மண்ணில் விழுந்தது.

மனச்சாட்சியை மூடி மறைத்திடும் ஆத்திகனைக் காட்டிலும், மன்ச் சாட்சியை மதித்து கடக்கும் காத்தி கனே சிறந்தவன் ஆகிருன் !!

பளிச்சென்று தென்பட்ட இவ்வரிகளையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ்ச்சித்தன். கண்ணிர் மாலைமாலையாக வழிந்து கொண்டிருந்தது. அவனது உதடுகள், மஹறி ...மஹறி என்று ஜபம் : செய்துகொண்டேயிருந்தன ! -