பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


தெய்வயானைதான் மஹேஸ்வரிக்கு மணப்பெண் தோழி 1

காளத்தியின் அருகில் அமர்ந்திட வேண்டிய ஆண்டாள் திருமண வைபவத்தின்போது மஹேஸ்வரி யின் அருகில் அமர்ந்தாள். தியாகச்சுடர் அவளது விழிகளில் தெறித்தது.

திருமண நாளிலே ஒர் அதிசயம் கடந்தது. தமிழ்ச்சித்தன் விழாவுக்கு வருகை தந்தான் ! வெள்ளிப்பேழை ஒன்றைப் பரிசளித்தான் !

முதல் இரவுச் சடங்குக்கு நாள் குறிக்கப்பட்டது. நல்லநேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில், தமிழ்ச் சித்தன் சாகப்பிழைக்கக் கிடக்கிருராம் !...உங்களை கையோடு அழைச்சுக்கிட்டு வரச்சொல்ருங்க !’ என்று

வேண்டியவன் ஒருவன் வந்து சொன்னுன்.

எவன் எக்கேடு கெட்டுப்போளுல் எனக்கென்ன ?? என்று எண்ணமிட்டான் காளத்திநாதன்.

  • ஊம், நீங்கள் டிரஸ்செய்து கொள்ளுங்கள் 1:2 என்றாள் ஆண்டாள்.

காளத்தி டீக்காக உடுத்துக்கொண்டான். வளர் பிறையை வீட்டில் எதிர்பார்த்துத் தவம் இருந்தான். அது வானத்தில் தோன்றியது மஹறிக்கு வெட்கம் போலிருக்கிறது !...ம்...வரட்டும், வரட்டும் !...” நகக் கண்ணில் குறுஞ்சிரிப்பு ஒட்டியது. ஈவினிங் இன் பாரீஸ் மணத்தது . . . .

கன்வு, கற்பனை, களிப்பு, காதல், உள்ள எழுச்சி போன்ற உணர்வுகளுக்கு மத்தியில் திணறிக் கொண் டிருந்த காளத்தியை அந்தத் தனியறை வாருங்கள் :

என்று கூவி அழைத்தது !