பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. அந்தி நிலா

உதய சூரியன் பூதலத்தாயின் பூப்பாதங்களைத் தொட்டு வணங்கிய பின்னர் தன்னுடைய கித்தியப் பணிகளை இயற்றத் தொடங்கினன். ஆதித்தனின் அழகு மிளிர் மூரல், உயிரொடுக்கும் இருளரக்கனின் அகம்பாவம் சேர் இருட்டைத் தொட்டு விரட்டி விட்டது. ஒளி சிந்தி, ஒளி சிதறிச் சிரிக்கும் பாருங்கள் நித்திலம், அதைப் போன்று, பால சூரியன் நகை இழை பின்னினன். புவனத்தின் கொண்டாட்டத்திற்குக் கேட்க வேண்டுமா, என்ன ! .

பிரமை தட்டிப் போயிருந்த காளத்திநாதன், பிரமையின் பிரேமைப் பிடியை விட்டு கையை உதறிக் கொண்டு, கிமிர்ந்து அமர்ந்தான். பஞ்சனே மெத்தை முள்ளாக உறுத்தியது. கண்கள் இரண்டினையும் கசக்கி விட்டுக் கொண்டு, விழி உயர்த்தி, விழிப்

9