பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


பார்வை செலுத்தினுன் அவன். கசக்கி விடப்பட்ட கண்கள் வலித்ததைப் போலவே, முன்னேடிப் பாய்ந்த இதயமும் வலித்தது. சுற்றிச் சூழ நோக்கினன். பற்றித் படர்ந்திருந்தது இளங் கதிரொளி. உடலின் இனம்புரியாத தவிப்பு, உள்ளத்தின் இனம் கண்ட கலக்கம், துரண்டிவிடப்பட்டிருந்த வெறியுணர்வின் தன்னுணர்வுப் போக்கு, நிறைவு பெருத உடலுறவுத் துடிப்பின் அட்டகாசமான சலனம், விழி இணையின் வெந்த கிலே - ஆகிய இத்தகைய சூழல்களிலே சுழல் விச, வீசிய அந்தச் சுழலின் வேகம் தணியாத நிலை யிலே, அவனுடைய முகத்தில் வந்து அணைந்தது, ‘ஈவினிங் இன் பாரீஸ் வாசனைத் திரவியத்தின் சுகந்த வாடை. இதம் பூத்த இதயம் அடுத்த இமைப்பில் அதிர்ந்தது ; அலறியது. “ ஐயையோ!’ என்று வாய் விட்டுக் கூவின்ை வாய் திறந்து அலறின்ை.

மறுகணம், அவனுடைய அழுகைக்குப் போட்டி யாக பெண் குரலின் விசும்பல் ஒசை படர்ந்து வந்தது. பதறியவனுக - பதைப்புண்டவனுக, உடல் குலுங்கிய போக்குடனே தலையைத் திருப்பிப் பார்த்தான் அவன். சூன்யமே சூத்திரதாரியாகிச் சிரித்தது. அதுவேதான், ஒருகால், சிருஷ்டித் தத்துவமோ ? இல்லை, அந்த வெறு. மையேதான் படைப்பின் பரம ரகசியமாக இருக்குமோ? அல்ல, அல்ல. ஒரு சமயம், அது சிருஷ்டிப் புதிராகவும் இருக்கலாமோ?....

வெளியில் வளி நிரப்பிக் கிடந்த சூன்யத்திலே கிளறிப் படர்ந்தொலித்த விம்மல் நாதம், கொதித்த எரிமலைக் குழம்பைக் கொட்டி

ளோடு அவனது இதயமும் சுழன்ற்து.