பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H35

தென்பு மறைந்த தெம்மாங்குப் பாவையென மஹேஸ்வரி கடந்து வந்தாள்.

பருவப்பொலிவின் உள்ளடக்கமாக விளைந்து நெளிந்து துடித்த கவர்ச்சி அவ்விரு கயல் விழிகளைத் துறந்து எங்கே மறைக்தோடியது ?

போதம் பூத்த உதட்டுக் கரையில் காற்று வாங்கித் தவழ்ந்த அந்தப் போதைப் புன்புறுவல் எங்கே ஒடி ஒளிந்தது?

இளமைச் செழிப்பத்துக்குக் கடவுள் வணக்கமாக உரு அமைத்துக் கொண்ட அவளது முகத் தெளிவு எங்கே வனவாசம் போயிற்று?

ஆடினளே! பாடினுளே ? சதங்கை மணி கயிற்றைவிட்டுத் தரையில் சிந்தி விழுந்தோடுவதற்கு கேராக, கணம் விட்டுக் கணம் நகை பயின்றாளே? கடனம் பயின்றாளே ?

கோல முகம் குனிய, குமிழ்ச் சிரிப்பு கெளிய, கள்ள விழிப் பார்வை பனி பெய்ய திருமணப் பக்தலிலே காட்சி யளித்தபோது, அவளிடை மிளிர்ந்த அந்தக் கருவம் பெருமிதம் - பூரிப்பு - புளகிதம் எங்கே?

மஹறி!...” கூப்பிட்டான் காளத்திநாதன். - - “அத்தான் p. காடி வந்தாள் மஹேஸ்வரி. பூங்கரம் பலகாரத் தட்டைச் சுமந்து வந்தது. “டிபன் சாப் பிடுங்கள் !’ என்றாள். குரல் தழுதழுத்தது. முகம் விங்கிப் போயிருந்தது. வதங்கிய மாம்பழக் கன்னங் களாக விளங்கின கன்னங்கள் இரண்டும். மார்பகம்

தள்ளியவாறு இருந்தது. :