பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


உள்ளம் தவியாய்த் தவித்து, தண்ணிராய் உருகிக் கொண்டிருந்தது.

  • மஹறி!...மஹறி!...” என்று தேம்பியபடி அவளது முகத்தைத் தடவினன் அவன். முகம் தெரிவித்துச் சின்னபின்னமாய்க் கிடந்த அழகுக் கவர்ச்சிப் படங் களை ஆராய்ச்சி செய்ய இப்போது அவனுக்கு மனம் இல்லை என்பதை உணர்த்துபவனுக, அவற்றைக் காலால் எட்டி உதைத்தான். அவன் அமர்ந்தான். அவளேயும் தன் உடலுக்கு ஆதரவாக உட்கார வைத் துக் கொண்டு, இட்டிலியைக் கிள்ளிக் கொடுத்து, அவனும் சாப்பிட்டான். புதிதாகக் கொணர்ந்த காப்பி யைச் சோதிக்க, முதலில் தானே குடித்து, பிறகுதான், எஞ்சியதை அவளிடம் கொடுத்தான். ‘ எங்கே, சிரி!... நேற்றிரவு தொடக்க நேரத்திலே சிரித்தாயே, அப்படி இம்முறையும் சிரி, மஹறி!” என்று குழைந்தான். மனித கெஞ்சத்தின் இனக் கவர்ச்சி உணர்வுகள் அவனுடன் கண்பொத்தி விளையாடின. அவனுடைய விரல்கள் எப்படி யெல்லாமோ-எங்கெல்லாமோ விளையாடின. தன் ஞாபகம், விழிப்புப் பெற்றப்போது, வாசற் கதவு கள் மூடிக்கிடப்பதைக் கண்டு கல்ல மூச்சை அனுப்பி ன்ை.

ஜோடிச் சிரிப்பு வழிந்தது! அழிந்த கனவுகளின் மயானபூமியில் ககை காட்டும் எழிலார் வெண்ணிலவை ஒப்ப, அந்த அழகுக் கூடத் தில் இளம் பொற் கிரணங்கள் தடம் காட்டிக் கொண் டிருந்தன! -

அழகே வடிவமாய்க் காணப்பட்ட ஆண்டாள் வந்து நின்று கதவைத் தட்டவே, காளத்திநாதன் திறந்தான். ஆண்டாளேக் கண்டவுன்டன், வா: என்று வரவேற்றான். ஆண்டாள் தங்கமான பெண்,