பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


‘மஹறியா?...மஹறிக்கு உடம்புக்கு ஒன்றுமில் லேயே ...’ என்று பதட்டத்துடன் வினவினன் அவன்.

“ ஏதுமில்லை. அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் !” என்று பதில் விவரித்தாள் ஆண்டாள்.

அக்தி வெயிலின் மயக்கம் மண்டிய ஒளியும் காற் றும் அவனைக் கிறங்கச் செய்தன. இனம் மட்டுப்பட மாட்டாத ஓர் ஏக்கமும், பகுத்துணர வாய்க்காத ஒரு வகை வேதனையும் அவனது உள்மனத்தில் நிறைந்து விட்டிருப்பதை அவனுல் கினைக்காமல் இருக்க முடியுமா ?

ஆண்டாள் நீட்டிய கடிதம் :

“ மதிப்புக்குரிய அன்பன அத்தான் அவர்களுக்கு,

கேரில் சொல்லத் தெரியவில்லை எனக்கு என் உடன் பிறவாச் சகோதரியைத் துாது விடுத்திருக் கிறேன்.

என்னை நான் புரிந்துகொண்டேன்!

நான் உங்கள் உயிர் என்பீர்கள் அடிக்கடி. முதல் இரவிலும் இவ்வுண்மையை வலியுறுத்திச் சொன்னிர்கள்,

நீங்களே என்னுடைய உயிர்த் தத்துவம் !

உங்கள் முகதரிசனம் கிட்டிய காளிலிருந்து நீங்களே என் தெய்வம் ஆனிர்கள் : காதற் கடவுள் ஆனிர்கள். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ என்ற பாடல் வரிகளைப் பாடி என்னே ரசித்து மகிழ்ந்த காட்சியில்தான் என் வாழ்வும் வளமும், கனவும் காதலும் களி கடமிடுகின்றன.