பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}

நீங்கள் தயவு செய்து சும்மா இருங்கள், மிஸ்டர் காளத்தி !” என்றாள் மஹேஸ்வரி.

இருந்திருந்தாற்போல இருக்கையைவிட்டு எழுந் தான் காளத்தி.

  • கான் போய் வருகிறேன் !” என்றான் அவன்.

நெருங்கி வந்தாள் மஹேஸ்வரி. ஒதுங்கி நின்றான் காளத்தி.

“ போய் வாருங்கள். ஆனல், ஒரு கிபந்தனை. போகும்போது, முகத்தைச் சிரிப்பாக்கிக் கொள்ள வேண்டும் ; நினைத்தபோது நினைத்த முகக் குறிப்பைக் காட்ட முடியுமா என்று சோதித்துக் கொண்டேன். சும்மா இருங்கள் என்று நான் வேடிக்கைக்குச் சொன்னேன். வார்த்தைக்களைக் குளிர் அறையில் பாடம் செய்து எண்ணிக் கணக்கிட்டு அளந்து பேசிவிட்டுச் செல்லுங்கள் !! - -

அப்போது, டெலிபோன் மணி ஒலிக்கவே, அவ. சரம் அவசரமாகப் பாய்ந்தோடினுள் பாவை ; அரைக் கணத்தில் திரும்பி வந்தாள். உங்கள் அப்பா உங் களே அழைக்கிறார்கள், சித்தன் ! என்று சேதி சொன்னுள்.

போன சுவடு, வந்த சுவடு தெரியாமல் ஹாலில் வந்து கின்று கொண்டான் தமிழ்ச் சித்தன். அப்பா என்னைச் சாப்பிட அழைக்கிறார். நான் இல்லாமல் அவர் சாப்பிடும் வழக்கம் இல்லை. நான் வருகிறேன் !” என்று தெரிவித்தான். மாடிப் படிகளில் தெளிக்கப்பட்டிருந்த ஒளிக் கோலங்களை மிதித்தவண்ணம் படிகளைக் கடக்கத் தொடங்கினன். அதே தருணத்தில், சாப் பாட்டுப் பாத்திரங்கள் சகிதமாகப் படியேறிய வேலைக்