பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

காரியைத் தொடர்ந்து வந்துகொண்டே யிருந்தாள் அங்கயற்கண் அம்மாள்.

சித்தனுக்கும் சேர்த்தல்லவா சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் ? வாங்க, தம்பி ‘ என்றாள் அவள். உலக அனுபவ முத்திரையை ஏற்றிருந்த கரை இழை களை ஒதுக்கினுள்.

இன்னொரு முறை ஆகட்டும், அம்மா. கான் போய் வருகிறேன். அப்பா காத்திருப்பார்கள் !!! என்று கீழிருந்தபடியே பவ்யமாகச் சமாதானம் சொல் லியவனுய் அங்கிருந்து ககன்றான் தமிழ்ச் சித்தன்.

‘ கொடுத்து வைத்த பிள்ளை, கொட்டக் கொட்டக் குவியும் பணம் !” என்று சன்னக் குரலெடுத்து வார்த் தைகளை உதிர்த்து வந்தாள் அங்கயற்கண் அம்மை.

திசை திரும்பிப் பார்த்த காளத்தி நாதனுக்கு இவ் வார்த்தைகளை ஏற்கச் சக்தி இல்லை. அவன் முகம் கறுக்கத் தொடங்கிற்று.

இம்மாற்றத்தைத் துண்டிலிட்டுப் பற்றினுள் மஹேஸ்வரி, ‘ காளத்தி, என்ன ஒருமாதிரியாக இருக் கிறிர்கள் ? முகத்தைச் சுத்தம் பண்ணிக்கொண்டு வாருங்கள், சாப்பிடலாம். மணி எட்டு ஆகப்போகிறது. சாப்பிட்டானதும், வழக்கம் போல உங்கள் நண்பரின் விடுதிக்குப் போங்கள். அப்புறம் திருப்பாதிரிப் புலியூருக்குப் புறப்படுவதைப் பற்றி நிச்சயம் செய்ய லாம்” என்று வரம்பு வகுத்த பின், புத்தக அலமாரி யைத் துழாவத் தொடங்கினுள் அவள்.

  • நல்லது, மஹேஸ்வரி !’ - சாப்பிட்டுக் கை கழுவினதும், ஈரக்கையைத் துடைக்கக்கூடக் கருத்தின்றி, சட்டைப் பையிலிருக்த கடிதத்தை மீளவும் ஒருமுறை வாசித்து முடித்தான் ;