பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


றிருந்தது. கண்களைப் பையத் திறந்தான். எங்கும் ஒளி வெள்ளம். நீளவாட்டத்தில் மடித்து வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தான். ‘ நகரத் தந்தையாக கம் கட்சியைச் சேர்ந்தவரே தேர்வு பெற்றிருக்கிறார் : என்று கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்த தலைப்பு வரிகளில் கண்ணுேட்டத்தைப் பதித்தான். எவ்வளவு குதுகலத்துடன் அதிகாலையில் ஓடிவந்து இந்த மகிழ்வுச் சேதியைக் காளத்தியிடம் தெரிவித்தான் அவன் ஆணுல், இப்போது அவன் மனம் ஒருநிலைப் பட ஒப்பவில்லை. யாரோ தன்னை வேண்டுமென்றே வஞ்சித்து விட்டதாகக் குழம்பினுன் , யாரையோ பழிக்குப் பழிவாங்க வேண்டுமென்ற ஆத்திரம் அவன் கெஞ்சத்தடியில் குமிழ் பறித்துக் கொட்டியது. தலையை ஒருமுறை குலுக்கி விட்டுக் கொண்டான். பிறகு, மெதுவாக கடந்தான். மூடப்பட்டிருந்த கதவைத் தட்டினன். சரிந்து விழுந்த மேலாக்கைச் செம்மைப் படுத்தியவாறு மஹேஸ்வரி கதவைத் திறப்பதைக் கண்டவுடன், அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. ஒப்பனை அறையிலிருந்து கிளம்பிய மின்னற்கொடி அவன் இதயத்தில் துவண்டது. மன்னிக்கவும் “ என்று சொல்லிப் பின்வாங்கின்ை. பெண்கள் மட்டுமே ‘ என்று எச்சரித்த பலகை அவன் தலையில் இமயமலை யாக மாறி உட்கார்ந்தது. - .

அரிதாரம் முழுவதையும் கழுவி முடித்து சோப்பின் நுரைபோக டவலினல் துடைத்துக் கொண்டிருந்தான் காளத்திநாதன். வாருங்கள், சித்தன் :

- தமிழ்ச் சித்தனுக்குச் சினம் பற்றிக் கொண்டுவரத் தலைப்பட்டது. ‘ என்னை அவமானப் படுத்தவேண்டு மென்று எத்தனை நாளாக நீங்கள் கங்கணம் கட்டி