பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y

யிருந்தீர்கள் ‘ என்று காளத்தியை நோக்கிக் கேள் விக் கணைகளைத் தொடுத்தான் அவன்.

காளத்தி முகத்தை நிமிர்த்தித் தன் கண்பனை ஏற இறங்கப் பார்வையிட்டான். நீங்கள் என்ன சொல்

கிறிர்கள் :

நான் எழுதிக் கொடுத்த வசனங்களை உச்சக் கட்டத்தில் மாற்றும் அதிகாரத்தை யார் உங்களுக்குக் கொடுத்தார்கள் :

ஏன், நீங்கள் எழுதித் தந்தவற்றைத் தானே நான் ஒப்புவித்தேன் ! தவறு நேர்ந்து விட்டதா ? என்று பதறினுன் காளத்தி. -

“ தவறுதல் உங்களுடைய வார்த்தைகளில் ஏற்பட வில்லை ; உங்கள் சித்தத்தில்தான் உண்டாகியிருக் கிறது !’ என்று கோபம் தொனிக்க இரைந்தான். மூக்குக் கண்ணுடியைத் துடைத்துப் போட்டுக் கொண்

G - - -

மிஸ்டர் சித்தன்...!! கயந்து கூப்பிட்டான் காளத்தி, -

“ ஏன் இப்போது கடிக்கிறீர்கள் ? நான் எழுதிய வசனத்தைத் திருத்தி எழுதிக் கொடுத்து, அதை மஹேஸ்வரியைக் கொண்டு பேசவும் வைத்துவிட்டு, இப்போது ஒன்றுமே தெரியாதவர்போல ஏன் பாவனை செய்கி ஹீர்கள் ? எனக்கென தனிப்பட்ட சில கொள் கைகள் உள்ளன. அவற்றை நீங்கள் அறிவீர்கள். அப்படிப்பட்ட அமைப்பிலே பழக்கப்பட்டுவிட்ட என்னை இப்போது கொள்கையற்ற கோழையாக அறிமுகம் செய்விக்க எத்தனை நாள் கனவு கண்டிர் கள் ? பாவம், என் தந்தை வேறு என்னைத் தவருக எடை போட்டு விட்டாரே!...” -