பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8

கைக்குட்டைத் துணி கொண்டு செக்கிறக் கன்னங் களைத் துடைத்தாள் மஹேஸ்வரி. நீண்ட மூச்சு இழை இழையாக வெளிவந்தது.

தமிழ்ச் சித்தன் சிந்தனை லயிப்பிலிருந்து விடுபட் டான். பட்டுச் சொக்காய் நுனியினுல் நெற்றியை ஒற்றினன். ஊம், கல்ல பாடம் படித்துக் கொண் டேன். வருகிறேன் ! என்றான். வெஞ்சினம் அடி நாதம் இட்டது. சுற்றிச் சூழ்ந்திருந்த வாசனைத் திர யங்களின் கெடி லேசாக விடைபெறத் துடித்தது.

விரைந்து சென்ற தமிழ்ச் சித்தனின் போக்கைக் கண்டு காளத்தி வருக்தின்ை. கோபத்துக்குத் தேறு தல் சொல்ல விரும்பினுன் அவன். பொறுங்கள் : என்று தடுத்தாள் மஹேஸ்வரி. இப்படிச் சொல்லி விட்டு, அவள் ஒசைப்படாமல் தமிழ்ச் சித்தனைத் தொடர்ந்தாள். மேடைப் படிவரை சென்றாள். அதற் குள் அவன் போய் விட்டான் ! அவள் பாதங்களில் பட்டுக் கிடந்தது ஒர் உறை. ஒட்டப்பட்டிருந்தது உறை. ஆனால், முகப்பில் முகவரி ஏதும் காணப்பட வில்லை. கிழித்தாள் அவள்.

மஹேஸ்வரி, சீக்கிரம் வாருங்கள் ! என்று துரிதப்படுத்தினன் காளத்திகாதன். மன்றத்தினர் குறித்திருந்த காலக்கெடு தாண்டி விட்டதென குறைப் படுவதாகத் தெரியப்படுத்தின்ை அவன்.

இதோ, புறப்பட்டு விடுவோம்!” . இறைந்திருந்த பொருள்களே துரிதம் சேர்த்து ஒன்று கூட்டினுள் அவள். டிரைவர் வந்து உதவினன். சாமான்களைச் சுமந்து சென்று காரில் திணித்தான். காளத்திநாதன் குனிந்த தலை நிமிராமல் மஹேஸ் வரிக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணினன். அப்போது,