பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


“ சக்தியாவது புத்தியாவது?...பெரிய உலகத்தை மனுேரதப் பிரயாணத்தினுல் தினமும் சுற்றி வருவ தாகப் பெருமை பேசுகிறார் தமிழ்ச் சித்தன் ஆல்ை, கடைமுறையில் பார்த்தால், உலகத்தைப் படைத்த வனேயே ஆட்டிப் படைக்கப் பார்க்கிருரே ? உள்ளத் தால் உலகைச் சுற்ற முயலும் இவர், உலகத்தால் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள முடிய வில்இலயே ???

உணர்ந்து பேசினுன் காளத்திநாதன் !

உணர்ந்து ககை பயின்றாள் மஹேஸ்வரி !

அண்ணுமலை மன்றத்தைவிட்டுக் கார் புறப் பட்டது. காலமும் துாரமும் கண்ணும்பூச்சி ஆடின.

கண்டெடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தைப் பிரித்தாள். அவளுடைய பூங்கரங்கள் எரிமலையின் வாயில் அகப்பட்டவைபோல் துடியாய்த் துடிக்கத் தொடங்கின. கடிதத்தைக் கசக்கி டம்பப் பையில் போட்டாள். அப்புறம், முன் ஆசனத்தில் அமர்ந்தபடியே தலையைமட்டும் திருப்பிப் பின்பக்கம் பார்த்தாள் அவள். காளத்திநாதன் சிந்தனைக் கோடு களில் ஊஞ்சலாடினன். மூடிக் கிடக்கும் கோயிலிலே திறந்த வண்ணம் கிடக்கின்ற இறைமையின் ஒளிப் புனலைத் தரிசித்தவளைப் போல இதயபூர்வமாக முறுவல் பூத்தாள் மஹேஸ்வரி !