பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25


ஒவ்வொருவரியும் தெறித்து விழுந்தது. உந்திக் கமலம் பொங்கியது ; இமைகள் கண்ணிர் முத்துக்களை சரம் தொடுத்தன. ஒய்வு ஒழிதல் இல்லாமல் கினைவு கள் பேசின. சம்பவங்கள். தான்தோன்றித்தனமாகத் தலையை நீட்டின. ஓர் அரைக்கணம் அவள் விழிகளை மூடினுள். இதயக் கதவுகள் திறந்து கொண்டன. மோகனம் கிரம்பிய முகம் ஒன்று தழைத்துத் தோன் றியது. சிரித்த முகம் அறிவுக்கும் உணர்வுக்கும். கட்டுப்பாடு அமைக்காமல், தவநிலையில் அமர்ந்திருந்த தனக்குத்தனனே கேட்டுக் கொண்டாள் : காளத்தி ! ஏன் என்னே இவ்வாறு சோதிக்கிறார் உங்கள் தோழர் ?...உங்களை என்னிடமிருந்து பிரிக்க முயல்கிறதே இக்கடிதம் ? ஏன்?...

ஒரு நாள் கடந்த கூத்து : எத்திராஜ் மகளிர் கல்லூரித் தமிழ் விழா ஒன்றில் மஹேஸ்வரி பிரசங்கம் செய்தாள். அரசினர் கல்லூரிக் கலைக்கழகத்தின் காரியதரிசி என்ற உறவில் காளத் திக்கு விசேஷ அழைப்புச் சென்றிருந்தது. வந்தான். வந்தவன், தன்கூட தமிழ்ச் சித்தனையும் அழைத்து வந்திருந்தான். காரணம், தமிழ்ச் சித்தன் மனம் ஒப்பி மஹேஸ்வரியின் இலக்கியப் பேச்சைக் கேட்க ஆசைப் பட்டதுதான். சொற்பொழிவைக் கேட்க ஆர்வம் இருக்கின்றதென்றால், இயற்கையாகவே அவனுக்குத் தமிழின்பால் ஈடுபாடு உண்டு என்றுதானே அர்த்தம் ? பேச்சு ஆரம்பமானது. அகத்தில் அகம் என்னும் பொருள் பற்றிப் பேசவேண்டும். இது மஹேஸ்வரியை அணைந்திருந்த கடமை. பேசிள்ை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி’யின் காதல் மரபு வாழ்க்கையை விளக்கினுள் ;