பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ...நீயா !”

ஆமாம் !”

ஒலிக் குறிப்புக்கள் ஒட்டின : உறவாடின உறவு வேண்டின.

பேச்சு ஆரம்பமாவதற்கு அரைமணி முன்னதா காவே ஹாலுக்கு வந்துவிட்டதாகச் சொன்னுன் காளத்தி, கையோடு, இன்னொரு கைங்கரியத்தையும் செய்துவிட எண்ணினுன் அவன் ; தமிழ்ச்சித்தனை அவளுக்கு அறிமுகப்படுத்தினுன்.

வணக்கம் !”

வணக்கம் !??

உங்களைத் தெரிந்து கொண்டதில், ரொம்பவும் மகிழ்கிறேன்.”.

உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டதில் நானும் பெரிதும் மகிழ்கிறேன் !’

சூயஸ் கால்வாய் நாகரிகத்தின் ஒப்பந்த வரிகள் ஆயிற்றே இவை ? வாழ வேண்டாமா ?

பல்வரிசைகளில் விரல்களை விளையாட விட்டான் காளத்தி. -

- மஹேஸ்வரி தலையை உயர்த்திக் கேட்டாள் : “ சற்றுமுன் நான் பேசிய கரடுமுரடான தமிழில்ை உங்கள் பற்கள் உடைந்து போயினவோ என்று சந்தே கப்படுகிறீர்களா ?

காளத்தி சிரிப்பை வெளிக்காட்டியதோடு * கம் மென்று இருந்துவிட்டான். - -