பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


அவனுக்கும் அவளுக்கும் ஊடே காப்பி வந்தது ; வந்த காப்பி தன் முத்திரையை இருஜோடி உதடுகளில் பதித்துச் சென்றது, மாடிக் கைபிடிச் சுவரில் சாய்ந்த வண்ணம், அவன் கின்றன் ; அவளும் அவனை ஒட்டி ஒட்டிச் சென்றாள். அக்திச் செவ்வானத்தின் அழகே. அலாதி !

‘ ஊருக்கு இன்றிரவு புறப்படப் போகிறேன் ? என்றான் காளத்தி. சட்டைப் பையிலிருந்து கடிதத்தை, எடுத்து நீட்டினன். சொல்லும் காரணத்திற்கு அத்தாட்சி காட்டும் ஸ்கூல் பையனே கினை ஆட்டிக் கொண்டாளா அவள் ? லேசாகத் தெளிந்த இளஞ். சிரிப்புக்கு அணையிட்டாள் அவள் : காளத்தி பவ்ய மாக நீட்டிய கடிதத்தைப் பாக்தவ்யத்தோடு பார்த்தாள் அவள். இதற்குமுன் இதைத் தற்செயலாகப் படித்த விவரத்தைச் சொல்லக் கூடாது; இது நாகரிகமாகாது! ‘அத்தை மகள் கடிதம் போட்டுக் கூப்பிடுகிருள்; போகப் போகிறீர்கள். ஊம், இனி கான் தபாலாபிசே சரணம் என்று கிடக்க வேண்டியவள்தான். கான் ஏழு. கடிதம் போடுகிறேன் ; நீங்கள் ஒன்றே ஒன்றுக்குப் பதில் போடுங்கள், போதும். நான் மனம் மகிழ்வேன். அதிக நாள் அங்கேயே தங்கிவிடாதீர்கள். இங்கே பட்டனத்தில் நாம் தொடங்க வேண்டிய புதிய தொழிலைப்பற்றித் திட்டவட்டமானதொரு தீர்மானத். துக்கு நாம் வந்தாக வேண்டும்” என்றாள் அவள்.

ஒவ்வொரு சொல்லுக்கும் அழகாகத் தலையை ஆட்டிய பெருமை காளத்தியையே சேர்ந்தது.

ஹாலேக் கடந்து, உள் அறைக்குள் நுழைந்து மீண்டாள் மஹேஸ்வரி. குறுக்கிட்ட அன்னையின் குறுக்குப் பேச்சுக்குக் குறுக்கு மறித்து கடந்தாள்.