பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காதலே விட்டு விரு’

புது டில்லியிலிருந்து அங்கயற்கண் அம்மாள் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். ஆடம்பர மாக உடுத்தியிருந்தார் ஒருவர். அவருக்கு ஐம்பது வருஷ உலகானுபவம் இருக்க வேண்டும். அங்கங்கே முதுமை கேலி பண்ணுமல் ஓய்ந்திருக்கவில்லை. அவர் அங்கயற்கண் அம்மாளுக்குத் தமையன் வேண்டும். ஒன்றுவிட்ட தமையன் வந்திருந்தவருக்குச் சம்சாரம் ஒருத்தி. அவளும் வந்திருந்தாள். கமலி-ராமதிலகம் தம்பதி. இருவருக்கும் ஒரே பெண். பெயர் திலோத் தமை. “ புராண காலத்தை மறக்காதிருக்க கம்மைப் போன்றவர்கள்தான் ஆயத்தப்படவேண்டும் !! என்று முன்னுரை கூறினர் ராமதிலகம். ‘ அதற்கு வழிகாட்டு வதைப் போலத்தான் நான் என் பெண்ணுக்கு திலோத் தமை என்று பெயர் சூட்டியிருக்கிறேன்!” என்று முடித்தார்.