பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


இப்படி அவர் வியாக்கியானம் சொல்லிக்கொண் டிருக்கையில், மாடி ஹாலுக்கு வந்து சேர்ந்த மஹேஸ் வரி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கக் கூடாதா ? தலைநகரத்திலே கம் மாமா இந்திரன் சபை ஏதாவது நடத்துகிருரா அம்மா ?” என்று ஐயம் ஒன்றை காதுக்காக உதிர்த்தாள்.

“ என்ன அப்படிக் கேட்டுப்பிட்டே? அண்ண னுக்கு டான்ஸ் அது இதெல்லாம் சின்ன வயசிலேயே ஊறிப் போன சங்கதியாச்சே ?’ என்ற பதிலை வேறு அங்கயற்கண் அம்மாள் திருவாய் மலர்ந்தருளினுள். வந்தது ஆபத்து இந்த ஆபத்து, சிரிப்பின் உருவத்தில் அவதரித்தது. சிரித்தவள் மஹேஸ்வரிதான். மகள் சிரிப்பதைக் கேட்டு, தாய் சிரித்தாள். தங்கையின் ககை முகம் கண்டு தமையனும் சிரித்து வைத்தார். இந்தப் பெண் மஹேஸ்வரிக்கு என் பெயர் பிடிக்க வில்லையா ? அவளுக்குப் பிடித்தால் என்ன, பிடிக்காது போனுல் என்ன ? நியூ டெல்லியில் என் தோழிகளுக்கு இதுதான் ரொம்பப் பிடித்திருக்கிறது. என் அண்ணு காந்தி ராமனுக்குக்கூட இந்தப் பெயர் அழகாகத் தோன்றுகிறதே ?...பார்த்துக்கொள்ளலாம் ; மஹேஸ் வரி எனக்கு அண்ணியாக வந்தால், அப்போதுவேண்டு மால்ை, அவளுக்காக வேண்டி, என் பெயருக்கு இன்னொரு மாற்றுப் பெயரைச் சிருஷ்டி செய்து கொள்ளலாம் ! என்று நினைவுப் பூக்களைக் கொய்தாள் திலோத்தமை. அவள் கண்களை நூல் பிடித்து கேர் முகமாகப் பார்த்த வேளையில், மஹேஸ்வரி மாடிப் ப்டிகளைக் கடந்து கொண்டிருந்தாள்.

ரோஜாப்பூக்கள் வாய் அவிழ்ந்தன ! .

மஹேஸ்வரிக்கு ஒரே பதட்டம். அவள் தோழி

தெய்வயானைக்குத் திருமணம் என்றால், அவளுக்கும்