பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35


  • எனக்கு மண்டையில் ஏறவில்லையே, மஹறி ?? * இது என் சொந்த நாடகம். என் வாழ்வையே தாயப் பலகையாகவும், என் கனவுகளையே தாயச் சோழிகளாகவும் ஆக்கிக்கொண்டு எனக்கு எதிர்க்கட்சி யில் அமர்ந்து விளையாட ஒரு புண்ணியவான் ஆசைப் படுகிறார். பசு சேரும் பாண்டிகளே அள்ளிக் கொள் வதோடு அவருக்குத் திருப்தி வராதாம். தாயக் காய் களைப் பற்றியும் அக்கறை கிடையாதாம். ஆனல் தாயப் பலகைதான் அவருக்கு வேண்டுமாம்!...” என்று பேசி நிறுத்தினுள் மஹேஸ்வரி. உற்ற தோழிக்கு உருப்படியாக ஏதாகிலும் புரிந்ததா என்பதை அறிய விரும்பியவளாக அவளே ஆழமாகப் பார்த்தாள். தெய்வ யானையின் இமைகளைக் கடந்ததும், கருமணிகளை மட்டிலும்தான் அவளால் காண முடிந்தது ; கருத்து எதையும் கவரமுடியவில்லை.

“தெய்வானே, உன் மூளையை இப்பொழுதே செல வழித்து விடாதே. கழுத்தில் மூன்றுமுடிச்சு விழுந்த தற்கப்புறமே மூளைக்கு அதிகப்படியான அலுவல் இருக் கும். இப்போது நான் போட்ட விடுகதைக்கு கானே விடைசொல்லி விடுகிறேன். என் வாழ்க்கையில் திரு வாளர் தமிழ்ச்சித்தன் விளையாட கனவு கண்டு கொண் டிருக்கிறார் !’

தெய்வயானை குறுக்கே பாய்ந்தாள் : “ தமிழ்ச் சித்தன் உன்பேரில் உயிராக இருந்தாரே, மஹறி ?”

“ அதனுல்தான் என் உயிரோடு விளையாட ஆசை கொண்டு திரிகிறார் : மஹேஸ்வரியின் பதிலில் அழுத் தம் இருந்தது. சூடு வேறு. -

தெய்வயானையிடம் விடை பெற்றுப் போக முனைக் தாள் மஹேஸ்வரி. அதற்குள், வேறொரு கினைவுச்