பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


தொடங்கி, அதை கிரவல் செய்யவும் துணிந்து விட்டார்,தில்லி மாமா !

அவர்களிடம் சொல்லிக்கொண்டு மாடியைஅடைக் தாள் மஹேஸ்வரி.

அடைத்திருந்த அறை : திறந்திருந்த உள்ளகம். புறத்தே அமைதி; அகத்தே வளி. கண்கள் மிதித்த கண்ணிர் ; சிந்தனை குதறிய எண்ணங்கள். பித்தம் மண்டை கொண்டுவிடும் போலிருந்தது அவளுக்கு. எழுதிய கடிதத் தாள்களை இணைத்தாள். எழுந்து நடக் தாள். சுவர் கெடுகிலும் படங்கள். காளத்தியும் தமிழ்ச்சித்தனும் மஹேஸ்வரியின் தந்தை வேதநாயகத் துடன் சேர்ந்தும் பிரிந்தும் படம் பிடித்துக் கொண் டிருந்தார்கள்.

வேதநாயகம் உயிரும் சதையுமாக உலவிய வேளை, காளத்தியைத் தம்முடன் அழைத்திருந்தார் பெரி யவர். மினர்வா தியேட்டரில் படம் பார்க்க வேண்டு மென்று திட்டம். காப்பி குடித்து முடித்து இருவரும் மாடிப்படிகளைக் கடந்து கொண்டிருந்தனர். சொல்லி வைத்தாற்போல், தமிழ்ச்சித்தனும் அப்பொழுது வந்து குதித்தான். நண்பனேக் கண்டதும், காளத்தி மகிழ்ச்சி யினுல் குதித்தான். இளவட்டங்கள் இரண்டு பேரும் சிறுவர்களாக மாறிய விந்தையை மனத்திற்குள்ளாக எண்ணிப்பூரித்தார் வேதநாயகம். போட்டிருந்த திட் டத்தில் சின்ன மாறுதல் உண்டாயிற்று. தமிழ்ச்சித்த னும் அவர்களுடன் படம் பார்த்தாக வேண்டுமென்று விரும்பினர்கள். - - -

கல்லூரித் தோழிகளுடன் கடற்கரைப் பக்கம் செல்லப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் மஹேஸ்வரி. மூவரையும் ஒருசேரக்கண்டதும், அவளுக்கு ஆனந்தம்