பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை

தின் கிகர் இல்லாத் தலைவனே உடையதாய் இருக்க வேண்டும் என்று தண்டியாசிரியர் பெருங் காப்பிய அமைப் புக்கு இலக்கணம் கூறுவதைப்போல் நாவல் என்னும் பெருங்கதை அமைப்புக்கு ஏதேனும் ஒர் தன்மையை இலக்கணமாகச் சொல்ல முடியுமா என்று நான் பலமுறை சிந்தித்தது உண்டு. அந்தச் சிந்தனேயை நான் இன்னும் முடிக்கவில்லை என்பதும் உண்மை. -

ஆல்ை அதே சமயத்தில், அழகுடைய பொருளுக்கு ஒரே இலக்கணம் அது ஏதோ ஒருவகையில் அழகாக இருக்கிறது . - என்பதுதானே தவிர இப்படி இபடித் தான் அழகாக இருக்கவேண்டும் - என்பது அன்று என்ற சுதந்திரச் சிக்தனேயும் குறுக்கிடுவது வழக்கம்.

இந்த உலகத்தில் கலைகள்-துண் கலேகள்--களின கலைகள் யாவும் இப்படித் தோடங்கி இப்படி வளர்ந்து இப்படித்தான் மூடியவேண்டும் - என்ற வரையறைக் சிறையில் அடங்காதவை, தலைமுறைக்குத் தலைமுறை மாறியும் தேறியும் வளர்ந்து கொண்டே வருகிற கலைகளே ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய கட்டுப்பாடு என்றா வது அடக்கிவிட முடியுமா ?

சீவக சிந்தாமணியின் காப்பிய அமைப்பு விரிவானது, சிலப்பதிகாரத்தின் காப்பிய அமைப்பு வேறு ஒரு வகை யானது. கமது நூற்றாண்டில் தோன்றிய மனேனமணியம், பாஞ்சாலி சபதம், பாண்டியன் பரிசு ஆகியவற்றின் காப்பிய அமைப்பு இன்னும் சுருக்கமான-தெளிந்த அமைப் புளனவை எனபதை எவரும் மறுகக மாடடாாகள். ஒபடக கொள்ளவும் செய்வார்கள். -

இன்றைய மறுமலர்ச்சி இலக்கியத்தின் பெருங் காப்பியம் நாவல்தான் என்று வைத்துக்கொண்டால் அப்படிக் கருதுவதையும் மறுக்க முடியாது. தமிழில் “ கமலாம்பாள் சரித்திரமும் மலேயாளத்தில் இந்து லேகாவும்’- தோன்றியபின் அவை ஆதி காவல்கள்’ என்ற பாரம்பரியப் பெருமையைத் தாங்கி நிற்க அவற்றினும் பெருமை மிகுந்த புதியு நாவல்கள் தோன்றி வளர்வதை

நாம் நம்பத்தானே வேண்டும் ?

வேறு வழியில்லாத காரணத்தால் விமர்சகர்களாக மாறிவிட்ட மாஜி நாவலாசிரியர்கள் தமிழில் இப்போது