பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


மஹேஸ்வரி தன் விழிகளே நேர் வசமாகச் செலுத் திள்ை நுணுக்கம் துாவி இதழ்களுக்குச் சிரிப்பைக் காட்டினுள். அந்தச் சிரிப்புக்கு நயனங்கள் துயர வடிவம் தந்தன. தமிழ்ச் சித்தனை உன்னிப்பாகப் பார்த் தாள் மஹேஸ்வரி. தங்களிடையே ஏடு விரிந்த அறிமு கத்தின் சம்பவக் கதையை எண்ணத்தில் அழுத்தி விட்டாள். கள்ளமிழந்த நோக்கல் : அன்பு பதிந்த பாவனை ; பாசம் பொதிந்த இயல்பு ; சிரிப்புச் சிந்தும் உரையாடல்கள் ; சிந்தனை கதிர் பரப்பும் கருத்துக் குவியல்கள் ; அனைத்திற்கும் மேம்பாடு காட்டிய சொக் தக் கொள்கைகள் -இவை அனைத்தும் தனித்தனிப் புள்ளிகளாக இயங்கி வளைந்து மறுகி, மடங்கி இணைந்த போது, தமிழ்ச்சித்தன் தோன்றிய விந்தையை எண்ணிப் பார்த்த நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்லவே?

இப்படிப்பட்ட சித்தனு இன்று களங்கத்தின் பிண்டமாகக் காட்சி தருகிறார் ...தன்னலம் அவரை ஆட்டிப்படைக்கிறதா ? விதியை கைத்தியம் பண் ஆணும் இவர் எனக்கென்று தனிவிதி ஒன்றை உண்டாக்க எத்தனம் செய்கிருரே, ஏன் ? மனிதனின் தேர்ந்த திறனுக்கு அடையாளம்தான் கடவுள் என்ற இங்கர் சாலின் கருத்தை அரங்கமாக்கி நாடகம் ஆடும் இவர் இப்போது என்னையே ஆடுகாயாக்கிவிட முனைப்புச் செலுத்தியிருக்கிருரே, ஏன் ? எதிர்நோக்காத இத் தகைய சூழலுக்குச் சுழல் உண்டாக்கிக் கொடுத்திருக் கிறதே, அதற்குப் பெயர் விதியா? இல்லையென்றல், வேறு என்ன பெயர் : சித்தன் இக்கிலக்கு என்ன பெயர் சூட்டுவார் : ஒருகால், இந்தப் புதிர்நிலைக்கு மறு பெயர் தான் சித்தனே ?...ஆம், அப்படித்தான் இருக் கும். அப்படியே இருக்கட்டுமே ?...என் உள்ளத். திற்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இந்தத் தமிழ்ச்சித்த -