பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


வந்தாள். அவ்வட்டத்திலே வளைய வளைய வந்து கொண்டிருந்த அவளது மனப் பாய்ச்சலுக்கும் குதிரை யின் உடற்பாய்ச்சலுக்கும் வித்தியாசம் ஒன்று உண்டு. இயங்கும் சக்தியின் சாட்டையடி குதிரையை ஒடவைக் கிறது. ஆகவேதான், அதற்குப் போய்ச் சேரவேண்டிய எல்லை மட்டுந்தான் லட்சியமாக அமைகிறது. ஆணுல் அவளைப் பொறுத்த வரையிலும், அவளுள் இயங்கிய உள்ளுணர்வின் கல்லதனமான தூண்டுதலின் வி2ள வாகவே அவள் தன் மனத்தை இயக்கி வந்தாள். ஆகவேதான், அவளால் நடந்த கதையைத் திருப்பிப் பார்க்க முடிந்தது ; கடக்கவேண்டிய கதையை அவள் சிந்திக்க வேண்டியிருந்தது.

காலக் குழந்தை நடைவண்டி ஒட்டிப் பழகிக் கொண்டிருந்தது. கடைத் தடத்தில் கிமிஷங்களும் வினுடிகளும் மிதிபட்டன : மிதிக்கப்பட்டன.

புருவத்தில் பட்டால் கரிக்காது ; கண்ணில் பட் டால்தான் கரிக்கும்.

வழி கடந்த சம்பவத் துணுக்குகள் சில வழிமீண்டு அவளுள் சிலிர்த்தன ; புருவங்கள் துடித்தன ; விழி கள் கலங்கின. கெஞ்சகத்தைத் தொட்டன. ஐந்து நாட்களுக்கு முன்னே அவள் எவ்வளவோ சந்தோஷ மாகத்தான் இருந்தாள். என் கடிதத்திற்கு காளத்தி எப்படியும் பதில் போடுவார். அவரிடமிருந்து கல்ல வாக்குக் கிடைத்த சடுதியிலேயே, என்னைப்பற்றி ஒரு நிர்ணயம் செய்துவிட வேண்டும். அப்போதுதான், சித்தனைப்போன்ற அவசரக் குடுக்கையின் தொல்லையும் காந்திராமனை யொத்த ஆத்திரக்காரரின் கச்சரிப்பும் ஒழியும் என்று ஆலோசித்தாள். இம்முடிவுக்கு ஆரம் பமாக அமைந்த கட்டங்கள் இரண்டு. அவற்றுள்