பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


சிரிக்கத் தெரிந்துவிடும் போதுதான், மே ற்கண்ட ஆச்சரியங்களுக்குக் கண் மண் தெரிவதில்லை. ஆகவே, அப்பாவி மனிதனும் கண்கடை தெரியாமல் சிரிக்கத் தலைப்படுகிருன். மனிதன் தன்னை மறந்து நகை புரியத் தொடங்கி விட்டால், வேறு வினை வேண்டுமா, என்ன ? அப்போதுதான், வாழ்க்கை கண்மயக்க ஆட்டமென உரு மாறுகிறது உருப் பெறுகிறது !

ஐயோ, பாவம்...!

அப்பாவி மனிதர்கள்...!

மஹேஸ்வரி காரிலிருந்து இறங்கினுள் ; காரின் கதவுகளை அடைத்துப் பூட்டினுள் ; கார்ச் சாவியுடன் வழி கடந்தாள். தன்னுடன் வழி கடந்து வந்த சிந்தனை லயத்தில் மனத்தை லயிக்கவிட்ட வண்ணம் இருந்த அவள், அப்பாவி மனிதர்கள் ! என்று தன்னுள் மெல்ல முணமுணத்துக் கொண்டாள். உள்ளொலி உதட்டுக் கரையில் தங்கியது. மார்புச் சேலையைச் செம்மை செய்து கொண்டு தலையை நிமிர்த்தினுள். கல்யாணப் பந்தல் காட்சியளித்தது; கபாலி கோயிலின் கோபுரக் கலசம் தரிசனம் தந்தது. உள்ளம் உள்ளடக்கி யிருந்த ஆற்றாமையில் மகிழ்வின் துளிகள் பாததுரளி அமைத்தன. கிறைவின் வாசல் வழி திறந்தது. தெய் வத்தை அழைத்தாள் ; அண்டினுள். என்னைக் காத் தருள், கற்பகாம்பிகை ! .

அவளுடைய பாதங்கள் பெயர்ந்தன ; சுவடுகள் தேங்கின. ஷிபான்பட்டு சலசலத்தது ; பொன் வண்டு கள் மொய்த்திருந்த வெல்வெட் சோளியில் லாவண்யம்

கொழித்தது; பருவத்தின்பூரிப்பு எம்பித் தணிந்தது. தன்னைத்தானே நோக்கினுள். ஆசைமுகம் ஒன்று

கனவுப் புள்ளியென விழியசைத்தது. அவளுக்கு உரிய