பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6]

லித்தது. இரவு கண்ட கெட்ட சொப்பனம் ஊர்ந்தது. என்னைத் தட்டிப் பறித்துக் கொள்ள மனப்பால் குடிக் கும் யமன் !

இந்திர விதானத்திற்குச் சமதையாக மணவறை விளங்கியது. தோடி ஆலாபனத்தை இதயத்துள் வாங்கி ரசித்தாள் மஹேஸ்வரி. அவள் பார்வையில் புதுமணக் காதலர்கள் கடனமாடினர்கள். ஆமாம் : இவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தால், திருப்பூட்டு வது எப்படியாம் ? என்ற ஒரு நகைச்சுவைத் துணுக் குப் பிசிறு தட்டியது. நல்லவேளையாக, மாப்பிள்ளை கையில் தாலியுடன் அமர்ந்திருந்தார். மஹேஸ்வரியைக் கண்டதும், கைதூக்கி வணங்கியவாறு, அருகிருந்த பதுமையிடம் புதுச்சேதியை ஒரு கிள்ளுக் கிள்ளித் தெரிவித்தார். பதுமை புதுமை சேர்த்து நாடக பாணி யில் அஞ்சலி முத்திரை காட்டியது.

கெட்டிமேளம் கொட்டியது.

பறந்து வந்த அரிசி மணிகளின் ஊடே மஹேஸ் வரியும் தன் கையிலிருந்த அட்சதை'களை வீசிய தருணம், தன் கையுடன் உரசிய புதுக்கையை இனம் கான வெடுக்கென்று திரும்பினுள். தெறித்த சினம் தறித்துக் கொண்டது. செளக்கியமாக இருக்கிறீர் களா, மிஸ்டர் காளத்தி ? என்று இன்பப் பெருமகிழ் வுடன் கூேடிமலாபம் விசாரித்த மஹேஸ்வரிக்குக் கண்டம் கட்டிக் கொண்டது போலும் ! - - ட்ரங்க்கால் ஒன்று வந்திருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், அவள் அவதியுடன் காரைச் செலுத் திச் சொல்லவில்லையா ? அப்போது அவள் மனத்தில் ஒர் ஆசை குருத்து விட்டது. ட்ரங்கால் போட்டவர் காளத்தியாக இருக்க வேண்டுமே ! என்று தியானம்