பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


காதல் தெய்வீகமானது அப்படி இப்படி என்று நான் பேச விரும்பாதவள். நீங்கள் என்னை விரும்புவதாகச் சொல்கிறீர்கள். ஆனல், நான் உங்களை விரும்பவில்லை. ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் தமிழ் மரபு. அதைக் காப்பாற்ற வேண்டுமென்பது என்னுடைய அக்கறை யல்ல. ஆனல் என்னை நான் காத்துக் கொள்ள வேண் டாமா ? நண்பர் காளத்தி எனக்கு அரண். ஆதலால், தயை செய்து என்னை மன்னியுங்கள். இன்னென்றை யும் உங்களுக்கு எச்சரிக்க வேண்டும். நீங்களும் உங் கள் குடும்பத்தவர்களும் கோட்டை கட்டுகிறமாதிரி, என்னை என் அம்மா இவ் விஷயத்தில் எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் திருமண அழைப்புக் கிடைக்கும் பட்சத்தில், கட்டாயம் வருவேன். பந்தம் அறுந்தாலும், சொந்தம் அறுந்துவிடக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். அப்புறம்: உங்கள் மன விருப்பம் !...”

அங்கயற்கண் அம்மாள் தன் அருமைமிகு மகளின் ஆணித்தரமான பிரசங்கத்தை எட்டி நின்று ஒட்டுக் கேட்கத்தான் செய்தாள். கேட்ட சடுதியில், அவள் ஆணியால் அறையப்பட்டாற் போன்று நிலைத்துப் போனுள். மகளைக் கூப்பிட்டு நாலு அறை கொடுக்கத் தான் துடித்தாள். ஆல்ை, பாரறியச் சீராட்டிய கரங் கள் அவை. பைத்தியக்காரப் பொண்ணு சின்னஞ் சிறிசு !! என்று வாய்விட்டு அனுதாபப்பட மாத்திரம் அவள் தப்பவில்லை. அழகுபோல அழைத்து, அன்பு போலச் சாதம் போட்டாள். ‘ அத்தானே நான் கல்யா னம் செய்து கொள்ள முடியாதிண்னு தெரிவிச்சுப் பிட்டேன், அம்மா !” என்று நாக்குத் தடிக்க மொழிக் தாள் அவள். அப்புறம் அவள் காலுபிடி கூடுதலாகச் சாப்பிட்டாள் ! . .