பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

.

கினைவுகளைத் தேனிக்களுக்கு உதாரணம் காட்டும் போது, அவை கொட்டாமல் இருந்துவிட்டால், பின்னர் இயல்பு கெட்டுவிடாதா ? உதாரணத்திற்கு உத்தா

ரணம் எங்ஙனம் கிட்டக்கூடும் ?

மஹேஸ்வரிக்குத் தொண்டை வலித்தது; லேசாகக் கனத்துக் கொண்டாள். புதிய சினிமாப்படம் ஒன்றுக் கான விளம்பரம் சித்து விளையாடிச் சென்றது. வழி யோரக் காட்சி அவள் விழியோரம் கண்சிமிட்டியது. காதலனை அண்டும் காதலி கண் காட்டிக் கருத்துக் காட்டும் பாவனையில் படங்கள் போட்டிருந்தார்கள். மஹேஸ்வரிக்குச் சிரிப்புத் தாளவில்லை. சிரிப்பைக் கக்கிய வண்ணம் மாடி நடையைக் கடந்து டெலி போன் அறையை மிதித்தாள். எண்களைத் திருப்பு முன், எண்ணங்களைத் திருப்பினுள். காளத்திநாதனே அழைப்பதற்கு உண்டான உபாயங்களை ஆராய்ந்தாள். மாருட்டம் செய்யாமல், உண்மையைப் பேசுவதே சிலாக்கியம் என நிச்சயம் செய்தாள். கான் அடியோடு விரும்பாத தமிழ்ச்சித்தனை அழைத்தே, நான் அக்தரங்க -சுத்தியாக விரும்பும் காளத்தியை அழைக்க வேண்டி யிருக்கிறது. கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக் கொண் டேன். இதோ, பொழுது படப்போகிறது. வரவில்லையே அவர் ?...?

அன்றாெரு தினம் மஹேஸ்வரி தபாலில் சேர்த்த கடிதங்கள் மூன்று. அவற்றுள் ஒன்று காளத்திக்கும் இருந்தது.

‘அன்பரே! உடன் புறப்பட்டு நேரில் வாருங்கள். நீங்கள் உயிரையே வைத்திருக்கும் உங்கள் தோழர் தமிழ்ச்சித்தன் விதி'யின் உருக்கொண்டு விளங்கு கிறார் என்னை உங்களிடமிருந்து மறைத்துக்கொள்ள