பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


வேண்டுமாம்!.கான் அவரை உணரும் காலம் வருமாம். அதுவே அவரது பாக்கியமாக அமையுமாம். சித்தன் சித்த பேதம் அடைந்து விட்டிருக்க வேண்டும். மறந்து விடாமல், வந்து சேருங்கள். உங்கள் உயிரை நீங்கள் எவ்வாறு மறப்பீர்கள் ?-மஹேஸ்வரி.”

காளத்தியின் முகத்தை அழித்துவிட்டு, சித்தன் முகம் காட்டுவதாக ஓர் உணர்ச்சி ஊடுருவிற்று. அவளுக்கு எரிச்சல் கூடியது. பொறிந்து கொட்டிக் கடிதம் வரைந்து தமிழ்ச் சித்தனுக்கு அனுப்பியதை அவள் கடந்த சில நாட்களாக அல்லும் பகலும் கினைவு. கூர்ந்தாள். மெய். -

“ ஐயா, சித்தரே ! உங்கள் தில்லுமல்லுச் சித்து விளையாட்டுக்கு ஏற்றவள் இந்த மஹேஸ்வரி அல்லள். கெஞ்சில் குறிபோட்டுக் கொள்ளுங்கள். வெளியே அமிர்தமும் உள்ளே விஷமும் வைத்துப் படம் காட்டும் நல்லது நீங்கள். கல்லதை நினைக்க, கல்லதைச் செய்ய, நல்லதற்கு வழி காட்டக் கற்றுக் கொள்ளுங் கள். அப்போதுதான் உங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். காலம் ஒரு மருத்துவன் அல்லவா? அந்த மருத்துவனிடம் கொஞ்ச காலத்துக்கு * ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். அன்பர் காளத்தியை நான் மறக்க வேண்டுமா? இவ் வரியைப் படிக்கும்போது, உங்களுக்கே நகைக்கத் தோன்றவில்லையா ? ஐயோ, பாவம் !-மஹேஸ்வரி :

அவள் மனம் வலித்தது. இந்தப் புண்ணியவான் கேற்றுதினம் ஒன்றுமே நடக்காதது மாதிரி எப்படி என்னிடம் அப்படிச் சுமுகமாகப் பேசினர் ...நல்ல... பாம்பு!...ஊம் !...நல்லபாம்பு!...”