பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வண்ணக் கலாப மயில்

‘இன்பங்களை மனம் சுமந்து கொண்டிருக்கை யில், கடிகாரத்தின் முட்கள் பொறுமையையும் தாமதத் தையும் சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றுவது உண்டல்லவா ? அப்படித்தான், மஹேஸ்வரிக்குத் தோன்றியது. காளத்தியை இன்னமும் காணுேமே?: என்று சிந்திப்பதற்குப் பதிலாக, ஏன் இப்படி கடிகாரம் மெதுவாக ஊர்கிறது?’ என்று சங்கடப்பட்டாள். இன்பத்தின் சுமைகூட ஒர் இன்ப வேதனைதானே? - அங்கயற்கண் அம்மாள் கடந்து வரும் அரவம்

கேட்டது. அரவம் கண்டாற்போல, மஹேஸ்வரி திணறினுள். ஆர்வத்தை இமை வரம்புகளில் தேக்கித் துடிப்புக் காட்டிய கண்கள், இப்போது அச்சத்தைத் தேக்கியிருந்தன. காளத்தி வரட்டும்; வந்ததும், அவரிடம் கலந்து ஆலோசனை செய்து கொண்டு,