பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளத்தி சிரிப்பைப் பயின்றான். பொரிந்திருந்த உதட்டுப் பாளங்களின் வெடிப்புக்களிலே சிரிப்பின் இழைகள் ஒடி ஒளிந்து கொண்டன போலும் சொல் லுக்குச் சொல் சிரித்து-சிரிப்பூட்டி, மகிழ்ந்து-மகிழ்வு ஊட்டிய அந்த காட்கள் எங்கே?

ஒரு காள் :

அப்போதும் மஹேஸ்வரியின் தங்தை உயிர் கொண்டுதான் விளங்கினர். மஹேஸ்வரிக்கு கல்லூரிப் பேராசிரியை சொல்லித் தந்த குறிஞ்சித் திணைப் பாட்டு ஒன்று விளங்கவில்லை. உம் மென்று உட்கார்ந்து விட்டாள். டென்னிஸ் ஆட தவியாய்த் தவித்த காளத்தி, உடனே அவ8ளச் சல்லடை போட்டு அரித் தான். அவளது மன அரிப்பை அவன் வசம் ஒப்படைத் தாள். பாட்டுப் புரியவில்லை. சரி...சரி, வா, வா! முதலிலே விளையாடுவோம். அப்புறம் சாப் பி ட் டு விட்டு, உன்னுடைய பேராசிரியை அம்மாவுக்கு போன்’ செய்கிறேன். உன் ஐயம் பறக்க ஆவன செய்கிறேன். முடிந்த வரை, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டு மாம். எங்கள் காலேஜில் கலைவாணர் பேசிய பேச்சை என்னுடன் நீயும் அமர்ந்து கேட்கவில்லையா, மஹறி : எங்கே, சிரியேன்!--

அந்த நாட்கள் எங்கே?

அந்த உலகம் எங்கே?.

மஹேஸ்வரியின் கண்களிலே கண்ணிர் முட்டிக் கொண்டு புரண்டது. காளத்தி ஏன் ஒருமாதிரியாக இருக்கிறார் ?? -

அன்னையின் காதுகளிலே வீசிய பொய்மொழிகளே எண்ணியபோது, அவளால் கள்ளங்கைப்புக் காட்டாமல்