பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இப்படிக்கு.காளத்திநாதன்

ஒன்றன்மீது ஒன்றாக ஏறி விழுந்து, ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து விலகி, ஒன்றாேடு ஒன்றாக ஒட்டி உறவாடி வி 2ள யா டி க் கொண்டிருந்தன. கடல் அலைகள். செக்கச் சிவந்த பெதும்பை பூப்பெய்திய வுடன், கன்னங்கள் கன்றிச்சிவப்பது உண்டல்லவா, அந்த ஒப்பனைக்கு ஒப்பாக, அடிவானம் விளங்கிற்று. மருதாணி பூசிய பட்டிக் காட்டுப் பூவையின் அழகான விரல் ககத்தில் வரம்பு கட்டிய வளைவு போன்று, பிறைக்கீற்று அலைகடலுக்குள்ளிருந்து மெள்ளமெல்ல எழுந்து கொண்டிருந்தது. வெண்மை கிறக் குமிழ்களிலே செம்மை நிறப் புள்ளிகள் தத்தளித்தன : பளிச்சிட்டன :-படபடத்தன. -

அமைதி செழித்த மணல் வெளி.