பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நிழல் எனும் கடவுள் !

$ $ காளத்தி!’ என்ற அழைப்புக் குரல் புறப் பட்டபோது, கடலே கதியென ஓடிக்கொண்டிருந்த அந்தக்கார் கின்றது. சகலவிதமான உணர்வுகளையும் தன்னிடமிருந்து தட்டிப் பறித்துக்கொண்டவளாகவே மஹேஸ்வரி அவனுக்குத் தோற்றம் அளித்தாள். சோள முறுக்கை அபகரித்துக் கொண்டு பறந்த பருந்தை மீண்டும் குழந்தை காண நேர்ந்தால், அதற்கு எப்படி ஆத்திரம் வரும் ? அப்படித்தான் அவனுக்குப் பெருஞ் சினம் மூண்டது. பருந்தை எதிர்க்க பாலகனுல் முடியா தல்லவா? அது போலவே, காளத்திகாதனின் நிலையும் நினைவும் இருந்தன. வண்ணக் கலாபமயிலெனத் தோன்றினவள் அல்லவா அவள்? மேகங்களின் மோகச் சிரிப்பைக் கண்டு மனம் பூரித்து, உடல் மகிழ்ச்சி பூத்து, சிக்தனையே சிரிப்பாய்-சிரிப்பே சித்தமாய் ஓடி ஆடித் திரிந்த அழகுமயில் ஆயிற்றே அவள்: அவளை எப்படி