பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

காரணம் இதுவே:

கோப்பையை ஏந்தியவாறு, பரிதாபத்துடன் காளத்தியை நோக்கிக்கொண்டிருந்தாள் மஹேஸ்வரி, என்னென்னவோ சாதனைகளேயெல்லாம் அமெரிக்கா வும், ருஷ்யாவும் செய்துகாட்டுகின்றனவே?...இந்தக் காளத்திக்கு மனித இதயத்தை அருளச் செய்ய இவ்விரு நாடுகளில்ைகூட முடியாது போலிருக்கிறதே? பில்லி சூன்யம் ஏதாவது வைத்து, சூதுசெய்து இவர் மனசை இப்படிக்கெட்டியாகத் தன்வசப்படுத்திக் கொண்டுவிட் டாரா தமிழ்ச்சித்தன் பில்லியாவது சூன்யமாவது என்பாரே அவர் ? ஆகவே, வேறு எப்படியோ நாடகம் ஆடிவருகிறார் இவர் .வரட்டும், வரட்டும்!... சூதும் வாதும் என்றாகிலும் ஒருநாள் சட்டை உரித்துக் கொள்ளாமல் தப்ப முடியாதென்பதுதானே வாழ்க்கை சொல்லிக் கொடுத்திருக்கும் தத்துவம் தத்துவமா? பூ!...அவர் வீட்டுப் பணம் என் காளத்தியின் உள் ளத்தை அடிமைச் சாசனம் எழுதிக்கொண்டு விட்டது போலும் ! தமிழ்ச்சித்தனின் திரை மறைவுக் கூத்துக்கு காளே இந்நேரம் ஒரு விடிவு கிடைக்கச் செய்துவிடுகி றேன் !...கொம்புத் தேன்மீது முடவன் ஆசைகொள்வ தைத் தடுக்க முடியாது தான். சரி ஆல்ை, முடவன் சார்பாகப் பரிந்து வந்து பேசி, தன்னை அழித்துக் கொள்ளத் துணிந்திருக்கும் இந்தக் காளத்தியை என்ன வென்பேன்?...என் இதயத்தின் இதயமாக-என் உயிரின் உயிராக.என் மூச்சின் மூச்சாக நிலவி வரும் இந்த அன்பர் என்னுடைய இதயத்தின் பாடத்தை-உயிரின் தத்துவத்தை-மூச்சின் உட்பொருளைஎன்றைக்குத்தான் உணரப்போகிருரோ ? இந்த மண்ணில் பிறப்பெடுத் திருக்கும் தமிழ்ச்சித்தன், தன்னை நம்ப ஒப்புகிறார்; ஆனல் தன்னைக் காத்துக் கொண்டிருக்கும் கிழலெனும்