பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


கடவுளே-கடவுள் என்கிற கிழலை-நிழலும் கடவுளும் ஆன ஒர் இயற்கை மெய்ம்மையை ஒப்ப மறுக்கிறார் : கோழை ...து !...”

லார், உங்களிடம் சிறு பொழுது தனிமையில் பேசவேனும்,’ என்றாள் மஹேஸ்வரி.

ஆஹா !” போட்டார் அதிகாரி ஆணித்தரமான இணக்கமொழி.

தோழியிடம் காது பொருத்திச் சொன்னுள் மஹேஸ் வரி: மிஸ்டர் காளத்தியை நீ பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆமாம், சொல்லிவிட்டேன் !’

சாந்திக்குப் புது உத்தியோகம் கிடைத்தது.

உடைமாற்றி வந்தார் தனபால். அவர் கடந்த தடத்தில் மஹேஸ்வரி தடம் பதித்தாள். மாடிஅறைக் கதவுகள் திறந்து மூடின.

போலீஸ் அதிகாரி அமைதி காத்த முகத்தோடு குறிச்சியில் சார்ந்திருந்தார். அவர் திருஷ்டி நூல் பிடித்த அளவில் எதிர்முகமாகச் சென்றபோது, அமைதி பறிபோன வதனத்தைத்தான் அவரால் இனம் பிரித்து உணர முடிந்தது. கைகளை மடித்து முதுகுப் புறம் மடக்கிக்கொண்டு அவர் நெட்டி முறித்தார். பட்டு மெத்தையிடப்பட்டிருந்த சோபாவின் கைப்பிடி யில் விரல்களை வைத்து, மூன்றாம் வகுப்புச் சின்னப் பையனைப்போல, தாளம் போட்டார். பிறகு, பொத், தானே அழுத்தினர்; செயற்கைக் காற்று அழுந்தியது. காலம் ஒரு காற்றடி, மனம் விசைப் பொத்தான். விசிறிகளே எண்ணங்கள். மனம் இயக் ண்ணங்களின் ஒட்டுதலிலும் மோத