பக்கம்:சோனாவின் பயணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“ஆனால், அவை அசிங்கமாக இருக்கின்றனவே, எதற்காக அவை இருக்கின்றன?”

“நாம் எப்படித் தண்ணீரைச் சேமித்து வைக்கிறோம் என்று சொன்னேனே, உனக்கு நினைவிருக்கிறதா? நாம் கொழுப்பைச் சேமித்து வைப்பது நம்முடைய திமிலில்தான். நமக்கு எதுவுமே சாப்பிடக் கிடைக்காத நாட்களில் அந்தக் கொழுப்புத்தான் நமது உணவாகும்” என்றது அம்மா.

“அது எப்படி?” என்று கேட்டது சோனா

“நாம் சாப்பிடும் உணவில் ஒரு பகுதி கொழுப்பாக மாறி, திமிலில் போய்ச் சேருகிறது. பாலேவனத்தில் சில நாட்களில் நமக்கு மிக மிகக் குறைவான உணவே கிடைக்கும். சிலசமயம் கொஞ்சம் கூட உணவு கிடைக்காது. அப்போது, பசியால் வாடி வதங்காமல் நம்மைப் பாதுகாப்பது இந்தக் கொழுப்புத் தான். இந்த இடத்தைப் போல உணவும் நீரும் உள்ள ஒரு பாலைவனச் சோலையை அடையும் வரை, நாம் நடந்து செல்வதற்கு வேண்டிய சக்தியையும் அது கொடுக்கிறது?” என்று பதில் கூறியது அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/16&oldid=482915" இலிருந்து மீள்விக்கப்பட்டது