பக்கம்:சோனாவின் பயணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மறுநாள் அது மறுபடியும் புறப்பட்டது. முயல், நரி, பன்றி, ஆடு முதலியவை விளையாடிக்கொண்டிருந்தன. சோனா அவைகளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தலையை உயர்த்திக்கொண்டு அது தன் வழியே சென்றது.

“நாம் அதைப் பின் தொடர்வோம்” என்றது நரி,

எல்லா மிருகங்களும் சிரித்துக்கொண்டும், கேலி செய்து கொண்டும் அதன் பின்னால் சென்றன. சோனா அவைகளைக் கவனிக்கவே இல்லே. அது நடந்து கொண்டே இருந்தது.

வழியிலே உள்ள குளக்கரையில் ஒர் அத்தி மரம் இருந்தது. அதில் பழுத்திருந்த பெரிய பழங்கள் ஆசையைத் தூண்டின. சோனா தன் தலையை உயர்த்தி சில அத்திப் பழங்களைப் பறித்து ருசி பார்த்தது. பழத்தின் அழகைப் போலவே அதன் ருசியும் மிக நன்றாக இருந்தது. சோனா வயிறு நிறையத் தின்றது. மற்ற மிருகங்கள் அதைக் கவனித்தன. அவை எல்லாமே அத்திப் பழம் தின்ன ஆசைப்பட்டன. ஆனால், கிளைகள் மிக உயரத்தில் இருந்தன.

"நாம் பக்குவமாகக் கேட்டால் அது நமக்குக் கொஞ்சம் பழங்கள் தந்தாலும் தரும்” என்றது மான்.

“நான் அதைக் கேட்கப் போவதில்லை. நமக்கு வேண்டிய பழங்களை நான் பறித்துத் தருகிறேன். என்னால் எதில் வேண்டுமானலும் ஏற முடியும் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!” என்று கர்வத்துடன் கூறியது ஆடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/22&oldid=482919" இலிருந்து மீள்விக்கப்பட்டது